கூலி உயர்வு வழங்கப்படாததை கண்டித்து விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த தொழிலாளர்கள் மாஸ்டர் வீவர்ஸ் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட உதவி கலெக்டர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் மாஸ்டர் வீவர்ஸ் சங்கத்தினர் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.