வெளியூரில் இருந்து போன் செய்த கணவர்… எடுக்காத மனைவி! அறையில் மாமனார் கண்ட அதிர்ச்சி!

வெளியூரிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகாமையில் இருக்கும் புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த மதிராணி என்பவர் ரெட்டியபட்டி வேளாண் அலுவலகத்தில் உதவி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

அருண் குமார் என்பவர் ஆந்திர மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். எனவே மதிராணி புளியம்பட்டியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று ஆந்திராவிலிருந்து அருண்குமார் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். வெகுநேரமாகியும் அவர் தொலைபேசியை எடுக்காததால் சந்தேகமடைந்த அருண்குமார் தனது தந்தையை தொடர்பு கொண்டுள்ளார்.

எனவே அவரின் தந்தை மற்றும் தாய், மதி ராணியின் அறைக்கு சென்று பார்த்தனர். அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக மதிராணி தூக்கில் பிணமாக இருந்தார். உடனே அருப்புக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் மதிராணியின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதிவாணி பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *