விருச்சிகம் ராசிக்கு….! திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்….! சேமிப்பு பெருகும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள்.

இன்று குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் உங்களுடைய திட்டங்கள் இருக்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் ஆசைகளெல்லாம் இனிதே நிறைவேறும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய புதிய முயற்சிகள் கண்டிப்பாக பலிக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலனைத் தரும். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றத்தை தரும். வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதில் திட்டமிடுவீர்கள். நல்லவர்களின் சந்திப்பு இருக்கும். நல்ல பழக்கவழக்கங்கள் இருக்கும். நட்பால் ஆதாயம் ஏற்படும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். சக பணியாளர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

உங்களுக்கு நல்ல பலனை எடுக்கமுடியும். அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு சிரமமில்லாமல் செல்லும். காதல் சிறப்பை ஏற்படுத்தும். மனம் சந்தோஷமாக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு இன்றைய நாள் பொறுப்புமிக்க நாள். மாணவர்கள் எண்ணற்ற சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 7                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *