“வெர்ஜினிட்டி(கற்பு)” ஆண்களுக்கானதா..? பெண்களுக்கானதா..? விளக்குகிறார் பெரியார்..!!

கற்பு என்பது ஆண்களுக்கானதா? இல்லை பெண்களுக்கானதா? என்பது குறித்து  பெரியார் கூறிய கூற்றை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

கற்பு என்ற வார்த்தை கல்  என்கின்ற இலக்கணத்திலிருந்து தோன்றியது அதாவது படி-படிப்பு என்பது போல கல்-கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு வருகிறது. கற்பு என்பது சொல் தவறாமை நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திற்கு விரோதம் இல்லாமல் நடப்பது உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கியதாக பெரியார் கூறுகிறார். ஆனால் நம் சமூகத்தில் கட்டமைக்கப் பட்டது என்னவென்றால் கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே வடிவமைக்கப்பட்ட ஒன்றாகவும், அதற்கும்  ஆண்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போலும் கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்று குறிப்பிட்ட பெரியார்.

Image result for பெரியார்

கற்பு என்பது வெர்ஜினிட்டி என்னும் ஆங்கிலச் சொல்லை குறிப்பதாக பெரியார் தெரிவித்தார். மேற்கண்ட வெர்ஜினிட்டி என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்றால் ஆணும் பெண்ணும் எந்த வித புணர்ச்சி சம்பந்தமே சிறிதும் இல்லாத பரிசுத்த தன்மை கொண்ட உடலை கொண்டிருக்க வேண்டும் என்பதே அர்த்தம். இதன்படி பார்க்கையில் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் பொருந்தும் என்பதை மேலை நாட்டவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் இந்திய நாட்டில் இன்றளவும் கற்பு பெண்களுக்கு மாத்திரம் மட்டுமே வடிவமைக்கப்பட்ட விதிமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Image result for பெரியார்

மேலும் கற்பு என்பது  இந்திய பெண்களை அடிமைப் படுத்தும் விதமாகவும் இருப்பதாக பெரியார் குற்றம் சாட்டியுள்ளார். அதில், ஒரு பெண் அவளுடைய பிறப்பில் ஒரே ஒரு மணமகனை மட்டுமே நினைத்து அவனை மட்டுமே திருமணம் செய்து அவனுடன் மட்டுமே கடைசி வரை வாழ்ந்து இறக்கவேண்டும் என்பது இந்திய நாட்டின் பெண்களுக்கு விதிக்கப்பட்ட நியதி. ஆனால் இந்திய நாட்டின் ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது.

Image result for பெரியார்

இது பெண்ணை அடிமைப்படுத்த கூடிய செயல்முறை ஆகும். அது மட்டுமல்லாமல் ஒரு ஆண் பெண்ணை பிடிக்கவில்லை என்றால் உடனடியாக விவாகரத்து செய்து கொள்ள முன் வருகிறான் அதற்கு இந்த சமூகம் அனுமதிக்கிறது. ஆனால் பெண்களுக்கு அவ்வகையான ஆதரவை சமூகம் அளிப்பதில்லை என்று தெரிவித்தார்.இதற்கான தீர்வாக  பெரியார் கூறியதாவது, கற்பு என்கின்ற வார்த்தையை மையப்படுத்தி எந்தவித காதலும் பாசமும் அன்பும் இல்லாத மிருகத்துடன் கடைசி காலம் வரை நரக வாழ்க்கை வாழ்வதை விட கற்பு என்கின்ற வார்த்தையை பகுத்தறிந்து பார்த்து தங்களது காதல் அன்பு பாசத்தை வெளிப்படுத்தி அதை வெளிப்படுத்தும் சக மனிதனுடன் சேர்ந்து இணைந்து வாழ்வதே நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் என்று பெரியார் தெரிவித்துள்ளார்.