சிறுவர் இல்லத்தில் மாணவர்கள் மீது தாக்குதல்…. வைரலான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாப்பட்டி அருகே தனியார் அமைப்பு சார்பில் சிறுவர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் சிறுவர் இல்ல வார்டன் ரவீந்திரன் சுற்றுலா செல்வதற்காக சிறுவர்களிடமிருந்து 1,500 ரூபாய் வசூலித்ததாக தெரிகிறது. இதனையடுத்து கல்லூரி மாணவர் ஒருவரை விட்டு பணம் கொடுக்காத மாணவர்களை ரவீந்திரன் தாக்குமாறு கூறியுள்ளார்.

இதனால் அந்த மாணவர் சக மாணவர்களை தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ரவீந்திரன் கூறியதன் பேரில் அந்த மாணவர் சக மாணவர்களை தாக்கியது தெரியவந்தது. இதனால் வார்டன் மற்றும் 18 வயதுடைய கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.