தற்கொலையா அல்லது விபத்தா…? தாயுடன் சென்ற பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்…. விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகள்….!!

தவறான பாதையில் மிகவும் வேகமாக சென்ற கார், லாரியின் மீது நேருக்கு நேராக மோதிய விபத்தில் தாயுடன் 3 குழந்தைகளும் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் 29 வயதுடைய Zoe Powell என்பவர் தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவருடன் காரில் ஆக்ஸ்போர்டுஷையரிலிருக்கும் ஏ40 சாலையில் மிகவும் வேகமாக தவறான பாதையில் சென்றுள்ளார். இதனையடுத்து மிகவும் வேகமாக சென்ற இந்த கார் அதே சாலையில் வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் Zoe Powell லும், அவருடைய 3 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

ஆனால் காரில் சென்ற zoe powell லின் கணவரும், 18 மாத குழந்தையும் படுகாயங்களுடன் உயிர்தப்பினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சேர்த்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இவர்கள் தவறான சாலையை பயன்படுத்த என்ன காரணம் என்பதை குறிப்பிடவில்லை. மேலும் இவர்கள் தற்கொலை செய்துள்ளார்களா என்ற கோணத்தில் விசாரிக்கும் போது, அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *