வீரியமிக்க புது கொரோனா பரவல்…. முன்னெச்சரிக்கை குறித்து…. முதல்வர் ஆலோசனை…!!

புதுவகையான கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் முதல்வர் மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருப்பினும் தொற்று பரவல் சற்று குறைந்து வருவதால் ஊரடங்கு  கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்வுக்கு வாழ்க்கைக்கு திரும்பி இருக்கின்றனர். இதையடுத்து கடந்த மாதம் தொடங்கி டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த தமிழக முதல்வர் பழனிசாமி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளார். இந்நிலையில் புதிய கொரோனா தமிழகத்தில் வராமல் இருப்பதற்காக வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடியும் நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா?வேண்டாமா? என்று யோசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தில் வீரியம் அதிகமான புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் பகுதிகளில் தீவிர பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் லண்டனில் இருந்து சென்னை வந்து ஐந்து பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. எனவே தமிழகத்தில் வீரியமிக்க புது கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.