கொரோனா குசும்பு ….. நெட்டிசன்கள் சேட்டை …. வைரலாகும் வீடியோ…. !!

கொரோனா வைரஸை தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரான் நாளுக்கு நாள் வேகமாக உலகம் முழுவதும் பரவியது. 141 நாடுகள் வரை பரவியுள்ள இந்த தொற்றால் 152,428க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,720க்கும் அதிகமோர் உயிரை பழிவாங்கிய இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் பல்வேறு அறிவுறுத்தலை உலக நாடுகளுக்கு வழங்கி வருகின்றது.

இதனால் ஒவ்வொரு நாடுகளும் கொரோனாவில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மற்ற நாடுகளுடனான போக்குவரத்து , வர்த்தகம் என அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி உள்ளது. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் ஸ்தாபித்துள்ளது. மேலும் நாட்டு மக்கள் யாரும் வெளியே கூட வேண்டாம் , பள்ளிகளுக்கு விடுமுறை என்று பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகின்றனர்.

நாட்டுக்குள் வரும் ஒவொருவரும் கொரோனா தொற்று உள்ளதா ? என்ற கண்காணிப்புக்கு பின் தான் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றார்கள். இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றால் 100க்கும் அதிகமானோர் பாதிக்கப்ட்டுள்ளதோடு , 2 உயிரிழப்புகளும் நடந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொடூரமான இந்த நோய்த் தொற்றால் பல்வேறு பல்வேறு வதந்திகளும் பரப்பப்படுகின்றது. இதன் மூலம் கொரோனா பரவுகின்றது , இதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றெல்லாம் பல வதந்திகளும் தாறுமாறாக பரவி வரும் நிலையில் கொரோனா குறித்த அவலங்களை மீம்ஸ் மூலம் , வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Image result for coronavirus update

கொரோனா வைரஸ் குறித்து ட்வீட்டரில் ட்ரெண்டாகும் என்ற ஹேஷ்டாக்கில் பல்வேறு வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ முழுவதும் கொரோனவை கண்டு பயப்படவா ? அல்ல சிரிக்கவா ? என்ற வகையில் நெட்டிசன்கள் அதனை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது அதிக பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டாகி  வருகின்றது.