விண்வெளியில் உயிர் வாழும் சூழலுக்கான ஆதாரம்?…. விஞ்ஞானிகள் ஆய்வு…..!!!!!

நம் பூமியில் பல்வேறு உயிரினங்கள் வசித்து வந்தாலும், மனித இனம் என்பது தனித்துவமுடன் இயங்கி வருகிறது. இருப்பினும் உயிரினங்கள் முதல் முதலில் எப்படி சூரிய மண்டலத்தில், அதுவும் பூமியில் தோன்றியது என்பது விடை காணப்படாத விசயங்களில் ஒன்றாக இருக்கிறது. அதை தேடி அலையும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் பூமியை போன்று உயிர் வாழும் சாத்தியக்கூறுகள் வேறெங்கும் உள்ளதா என்ற ஆய்வை நாசா தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி உதவியுடன் 630 சூரிய ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள பனியடர்ந்த மேகக்கூட்ட அமைப்பு ஒன்றில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த மேகக்கூட்ட அமைப்பில் காணும் தனிமங்கள், உயிர் வாழும் சூழலுக்கு உதவியாய் இருக்கிறது என தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply