இந்தியா முழுவதிலும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
டெல்லி, மும்பை, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அணைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் பிள்ளையார்பட்டி, திருச்சி மலைக்கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மக்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து இறைவனை வழிபட்டு வருகின்றனர்.