”விநாயகர் சதுர்த்தி விரதம்” இப்படி தான் இருக்கணும்….!!

விநாயகர் சதுர்த்தி விரதத்தை முழுமையாக தெரிந்து கொண்டு விநாயகரின் அருள் பெறுங்கள்.

இந்த விரதத்தை பலர் பல்வேறு விதமாக பின்பற்ற அறிவுறுத்துகின்றனர். ஆனால் அவை யாவுமே கட்டாயம் அல்ல. நாம் விநாயகர் சதுர்த்தி விரதத்தை மிகவும் ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை. நம்முடைய சக்திக்கு உட்பட்டு செய்யலாம். உண்மையான பக்தியுடன் நம்மால் இயன்ற வழியில் எளிமையாக விரதத்தையும், பூஜையையும் பின்பற்றினாலே போதும் விநாயகப் பெருமான் மனமகிழ்ந்து நோன்பை ஏற்பார். அவர் விரும்புவது பக்திபூர்வமான ஈடுபாடு மட்டுமே.

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விரதம் பாத்தீங்கன்னா செப்டம்பர் 2 ஆம் தேதி திங்கட்கிழமை.  இந்த விரதத்தை இருக்க விரும்பும் அன்பர்கள் செப்டம்பர் மாதம் திங்கட்கிழமை 2_ஆம் தேதி காலை 9 மணி 41 நிமிடங்கள் முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை ஏழு மணி 36 நிமிடம் வரை விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

அப்போது உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி விரதம் இருப்பது சிறந்தது. முடியாதவர்கள் தங்களது உடல்நிலைக்கும் , சக்திக்கும் உட்பட்டு ஒரு பொழுது உப்பு சேர்க்கப்படாத உணவை சாப்பிடலாம் அல்லது குடிநீர் , பால் , பழரசம் எதையாவது ஒன்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். இல்லையென்றால் சர்க்கரைவள்ளிக் கிழங்கை உப்பு இல்லாமல் வேக வைத்து உண்ணலாம் அல்லது சத்து மாவை வெல்லத்துடன் கலந்து ஒரு வேளை மட்டும் உண்ணலாம். கர்ப்பிணிப் பெண்கள் உபவாசம் இல்லாமல் வெறும் பூஜை மட்டும் செய்து வணங்கலாம்.