“விழுப்புரம் அருகே பெண் தீக்குளிப்பு” போலீசார் தீவிர விசாரணை…!!

மேல்மலையனூர் அருகில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் புதூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த விவசாயி கன்னியப்பன்.இவரின் மனைவி செல்வராணி .45 வயதான இவர் நேற்று முன்தினம் வீட்டில் மண்ணெண்ணெய்  ஊற்றி கொண்டு தீவைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்ததை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து செல்வராணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

மேலும் அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள்  அறிவுறுத்தியதையடுத்து  அவர் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த  நிலையில்  பலனின்றி செல்வராணி உயிரிழந்தார். இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு  செல்வராணி எந்த காரணத்திற்காக தீ வைத்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.  .