கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள்…. பட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருக்கும் 5 காட்டு யானைகள் கிராம பகுதிகளுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்துகிறது. நேற்று முன்தினம் 2 யானைகள் தனியாக பிரிந்து கிராமத்திற்குள் நுழைந்தது.

இதனையடுத்து யானைகள் தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியதை பார்த்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் காட்டு யானைகளை விரட்டி அடித்தனர். மேலும் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply