இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் ஊராட்சியில் ஜாகிர் உசேன் என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் வியாசர்பாடியில் வசிக்கும் உமா மகேஸ்வரி என்பவர் இறந்த தனது கணவர் முனுசாமிக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது இறப்பு சான்றிதழ் கொடுக்க ஜாகிர் உசேன் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து உமா மகேஸ்வரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி உமா மகேஸ்வரி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜாகிர் உசேனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜாகிர் உசேனை கையும், களவுமாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.