விளம்பரத்திற்காக மஹாலக்ஷ்மி வெளிட்ட போட்டோ…. மோசமாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்….!!!!

சீரியல் நடிகையான மஹாலக்ஷ்மி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை சென்ற ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். திருப்பதியில் நடைபெற்ற அவர்களது திருமணத்தின் புகைப்படம் லீக் ஆன பிறகுதான் அது அனைவருக்கும் தெரியவந்தது. இதையடுத்து ரவீந்தர் ஒரு தயாரிப்பாளர் என்பதால் தான் மஹாலக்ஷ்மி திருமணம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார், பணத்துக்காக தான் இதெல்லாம் என அவருக்கு பல விமர்சனங்கள் வந்தது.

அதற்கு பதிலடி கொடுக்கும் அடிப்படையில் இருவரும் பேட்டி கொடுத்தனர். மஹாலக்ஷ்மி சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் influencer ஆக பல்வேறு பொருட்களின் விளம்பரங்களை செய்து வருகிறார். அண்மையில் அவர் நைட்டி பிராண்ட் விளம்பரத்துக்காக தன் படுக்கையறையில் எடுத்த போட்டோவை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் சிலர் மோசமான கேள்விகளை கமெண்டில் கேட்டிருக்கின்றனர். அதாவது “எப்போ நல்ல செய்தி சொல்ல போறீங்க” என்று கேட்டிருக்கின்றனர்..