இது ரொம்ப ஆபத்து….இனிமேல் அப்படி பண்ணாதீங்க…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!

விளைநிலங்களில் மின் வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் பன்றி, எலி போன்ற விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தங்களின் விளை நிலங்களை சுற்றி மின்வேலி அமைக்கின்றனர். இதனால் வன உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் மின்வேலியில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.

எனவே இனிவரும் காலங்களில் விளைநிலங்களை சுற்றி மின்வேலி அமைக்கக் கூடாது எனவும், அதனை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *