“விக்ரம் வேதா” ஹிந்தி ரீமேக்…. களமிறங்கும் மாஸ் ஹீரோக்கள்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

விக்ரம் வேதா திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “விக்ரம் வேதா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஏனென்றால் இத்திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் மிகவும் அற்புதமாக நடித்து அசத்தி இருந்தனர். இதை தொடர்ந்து நல்ல விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகிறது.

இந்தியில் ரீமேக்காகும் இப்படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும், சையத் அலிகானும் நடித்து வருகின்றனர். ஹிந்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் இப்படத்தில் பிரபல நடிகை ராதிகா ஆப்தேவும் நடித்து வருகிறார்.

மேலும் விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகிய இருவருமே தான் இந்தி ரீமேக்கையும் உருவாக்குகின்றனர். எனவே தமிழை போலவே இந்தியிலும் இப்படத்தை சிறப்பாக வழங்குவோம் என்றும் இப்படம் ஹிந்தியில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட்டடித்து ஒரு மேஜிக்கை செய்யும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *