கடாரம்கொண்டானில் பாடல் பாடும் விக்ரம் ….!!

காடராம் கொண்டான் படத்தில் ஒரு பாடல் பாடி மீண்டும் பாடகராக மாறியுள்ள  நடிகர் சியான் விக்ரமால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சமீபகாலமாக திரையுலகில் நடிகர்கள் டி.ராஜேந்திரன் போன்ற அவதாரங்களை எடுத்து வருகின்றனர் . பாட்டு பாடல்கள் , நடனம் , இயக்கம் ,ஒளிப்பதிவு ,  டப்பிங் ,  ரீ ரெக்கார்டிங் , ப்ரொடெக்ஷன் என  எக்கச்சக்கமான திறமைகளை உள்ளடக்கியுள்ளனர் . அந்த வரிசையில் தற்போது சியான் விக்ரம் இணைந்துள்ளார் .  நடிகர் விக்ரம் ஆரம்பத்தில் நடிக்க வந்த பிறகு பட வாய்ப்புகள் குறையும் போது டப்பிங் ஆர்டிஸ்டாக மாறினார் . அதேபோல விக்ரம் பாடவும் செய்தார் .

தற்போது ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் கடாரங்கொண்டான் . பிரெஞ்சு மொழி படத்தின் ரீமேக்காக்காக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப்படம்  ஏறத்தாழ நிறைவு கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது . 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட  படப்பிடிப்பு வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு , எஞ்சிய பிற படப்பிடிப்பு சென்னை சுற்றுவட்டார பகுதியில் படமாக்கப்பட்டது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர்  ஜிப்ரான் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் .

Image result for ஜிப்ரான் இசையமைப்பாளர்
இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஜிப்ரானின் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார் இந்தப் பாடல் மிகவும் சிறப்பாக வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.  ஜிப்ரான் இசையில் அண்மையில் வெளிவந்த அறம் , வீரம் ,  ராட்சசன் ஆகிய திரைப்படங்கள் பேசப்பட்டன. இந்த வரிசையில் தற்போது கடாரம் கொண்டான் படத்திலும் ஜிப்ரானின் இசையில்  அமைந்திருப்பதால் இந்த படமும் கவனிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
Image result for விக்ரம் பாடிய பாடல்

மேலும் நடிகர் விக்ரம் பாடிய பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் . அந்த வரிசையில் கூட அண்மையில் சாமி 2 படத்தில் ஒரு பாடலை நடிகர் விக்ரம் பாடியது மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது . தற்போது ஜிப்ரான் விக்ரமும் இணைந்துள்ளதால் இந்தப் பாடலை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  அனேகமாக கடாரம் கொண்டான் திரைப் படத்தின் சிங்கிள் ட்ராக் ஆக இந்தப் படம் வெளியாகலாம் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *