விக்ரம் பிரபுவின் ”டாணாக்காரன்”….. நேரடி OTT ரிலீஸ்…. வெளியான புதிய தகவல்….!!

விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’ திரைப்படம் நேரடியாக OTT யில் ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் கடைசியாக ‘புலிகுத்திபாண்டி’ படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. இதனையடுத்து, இவர் தற்போது ”டாணாக்காரன்” படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் இயக்குகிறார்.

டாணாக்காரன்' படத்தின் கதை என்ன..? | nakkheeran

இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். மகேஷ்மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படம் நேரடியாக OTTயில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *