பணப்பரிப்பு… மோசடி… கொலைமிரட்டல்… விஜய் தந்தை மீது தொடர் புகார்…. அதிர்ச்சியில் விஜய் குடும்பம்…!!

சென்னை தலைமை  காவல்நிலையத்தில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் மீது மோசடி புகார் ஒன்றை சென்னை தலைமை காவல் ஆணையத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினரான மணிமாறன் என்பவர் அளித்துள்ளார். அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான டிராபிக் ராமசாமி என்ற திரைப்படத்தை விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியதோடு அவரே  அதில் நடிக்கவும் செய்தார். இப்படத்தை வெளியிடுவதற்கான காப்பீட்டு உரிமையை கனடா வாழ் தமிழர் ஒருவருக்கு அளிப்பதாக கூறி அவரிடம் இருந்து ரூ 21 லட்சம் ரொக்கம் பெற்றதன் பின் ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளார்.

Image result for vijay father

அதன்பின் படத்தை தானே வெளியிடப் போவதாகவும் ஒப்பந்தத்தை இரத்து செய்து பணத்தை திருப்பி தருவதாகவும் கூறினார். இதையடுத்து ஒப்பந்தத்தை ரத்து செய்த எஸ் ஏ சந்திரசேகர் கூறியபடி பணத்தை தரவில்லை. இதையடுத்து கனடா வாழ் தமிழர் தமிழகத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சங்க உறுப்பினரான மணிமாறன் என்பவரை தொடர்பு கொண்டு பணத்தை மீட்க உதவியை நாடினார். பலமுறை அவரிடம் பணத்தை கேட்டபோது பணத்தை தர முடியாது என்று கூறியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சந்திர சேகர் மீது  குற்றசாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து இன்று அவர் மீது சென்னை தலைமை காவல் நிலைய அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை மணிமாறன் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *