சிறப்பாக நடைபெற்ற விஜயதசமி…. சாமிக்கு சிறப்பு வழிபாடு…. அலைமோதிய பக்தர்கள்….!!

விஜயதசமி முன்னிட்டு கோவில்களில் ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் பங்கேற்று அவர்களின் படிப்பை தொடங்கி வைத்துள்ளார்.

விஜயதசமி நாளன்று தொடங்கப்படும் எல்லா காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த நாளில் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. இதில் விஜயதசமி தினம் அன்று திருவோண நட்சத்திரம் வருவது மற்றொரு சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அந்த வகையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி மற்றும் லட்சுமி ஆகிய சுவாமிகளின் சன்னதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து பூஜை செய்து பள்ளிகளில் சேர்ப்பது வழக்கமாக இருக்கிறது.

இதனையடுத்து கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்து சென்றனர். இதில் தம்பதிகள் தங்களது குழந்தைகளுடன் படிக்கத் தேவையான பேனா, பென்சில், கரும்பலகை உள்பட அனைத்தையும் எடுத்து வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டுள்ளனர்.

பின்னர் கோவிலில் வைத்து ஏடுப் படிக்கும் நிகழ்ச்சி நடந்ததில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஹயக்ரீவர் சன்னதி முன்பாக அமர்ந்து தரையில் அரிசி மற்றும் நெல்களை கொட்டி குழந்தைகளை தமிழில் அ, ஆ என எழுத வைத்து அவர்களின் பள்ளிப்படிப்பை ஆர்வத்துடன் தொடங்கி வைத்துள்ளனர். இதற்கு முன்னதாக ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி முன்னிட்டு தேவநாதசுவாமி கோவிலில் மற்றும் ஹயக்ரீவர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கடலூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமியை தரிசனம் செய்து சென்றுள்ளனர். மேலும் இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் சிறந்த முறையில் செய்து இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *