நேர்மையானவர்களுக்கு சோதனை வரும் , சோதனையை வெல்வோம் கல்லூரியை மீட்போம் என்று விஜயகாந்த் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிகவின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தவில்லை என்று கூறி அவர் வாங்கிய கடன் சுமார் ரூ 5,52,73,825 கடன் , வட்டி , இதர செலவை வசூலிக்க அவரின் சாலிகிராமத்தில் உள்ள வீடு , மதுராந்தகம் மாமண்டியூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியல் கல்லூரியை வருகின்ற ஜூலை 26_ஆம் தேதி ஏலம் விட இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,நாங்கள் கல்லூரி ஆரம்பித்து 20 வருடம் ஆகிவிட்டது.அதன் பராமரிப்புக்காக கடன் வாங்கினோம். தமிழகத்தில் உள்ள எல்லா கல்லூரி நிலைமையும் இப்படித்தான். எங்களுக்கு கடனை அடைக்க இன்னும் இரண்டு மாதம் அவகாசம் வேண்டும் . இதை சட்ட ரீதியாக கையிலெடுத்து நிச்சயமாக தீர்வு காண்போம். தமிழகம் முழுவதும் உள்ள எல்லா காலேஜ் நிலைமையும் இதுதான். நேர்மையாக நடப்பவர்களுக்கு சோதனை வரும், சோதனையை வெல்வோம்.கஷ்டப்பட்டு கடனை அடைத்து கல்லூரியை மீட்டெடுப்போம் என்று பிரேமலதா தெரிவித்தார்.