நயன்தாராவின் ஐரா படத்தை டிவியில் பார்க்க விஜய் டிவி…! ஆன்லைனில் பார்க்க அமேசான்…!!

நயன்தாராவின் ஐரா படத்தை டிவியில் பார்க்க விஜய் டிவியும் ,  ஆன்லைனில் பார்க்க அமேசான் னும் ஒப்பந்தமாகியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ‘மெட்ராஸ்’ கலையரசன், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள திரைப்படம் ஐரா. இந்த படத்தை சார்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படம் திகில் கலந்து எடுக்க்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர், ப்ரோமோ காட்சிகள் என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. இப்படத்திற்கு அதிகாலை காட்சியெல்லாம் ரெடியாகி விட்டது. இந்நிலையில் இப்படத்தினை டிவியில் ஒளிபரப்பும் உரிமையை விஜய் டிவியும், ஆன்லைனில் ஒளிபரப்பும் உரிமையை அமேசான் நிறுவனமும் பெற்றுள்ளது. இப்படம் திரையில் ஓடிய சில நாட்களில் ஏன், மே 1ஆம் தேதியன்று கூட விஜய் டிவியில் இப்படம் ஒளிபரப்பப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.