”காஷ்மீர் விவகாரம்” நடிகர் விஜய் சேதுபதி அதிரடி கருத்து…!!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என பிரபல நடிகர் விஜய் சேதுபதி விமர்சித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். இவ்விழாவில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் பற்றி உங்களின் கருத்து என்ன என்று விஜய் சேதுபதியிடம்  கேள்வி கேட்கப்பட்டது.

Image result for விஜய் சேதுபதி பேட்டி

இதற்க்கு பதிலளித்த விஜய் சேதுபதி  ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது மேலும் காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து கூறினார், அடுத்தவர் வீட்டு பிரச்சனையில் மற்றொருவர் தலையிட முடியாது அண்டை வீட்டார் மீது அக்கறை செலுத்த வேண்டும், ஆளுமை செலுத்தக் கூடாது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது  என விஜய் சேதுபதி பதிலளித்தார்.