விஜய் படத்தின் கிளைமாக்ஸ் இப்படி தான்…. ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை…!!!

தமிழக திரைப்பட துறையில் பணிபுரியும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், அனைத்தையும் வெற்றி படமாக கொடுத்தவர்.  இவரது இயக்கத்தில் தற்போது  விஜய்யின் 67 படம்  இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்களது கூட்டணியில்  வெளிவந்த மாஸ்டர் திரைப்படம்  திரையில் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்டது. இதில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன் ஆகியோர்  நடித்துள்ளனர்.

மாஸ்டர் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சிறைக்கு செல்வது போல காட்சி அமைந்திருந்ததை பார்த்து ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனனிடம் இவ்வாறு கேள்வி கேட்டுள்ளார். அதாவது “மாஸ்டர் படத்தில் சிறைக்கு சென்ற பின் JD சாருவை சந்திப்பாரா? என்று கேட்டதற்கு, “அவர் சிறையில் இருந்து வந்த பின் நாங்கள் இருவரும் காதலில் விழுந்து, திருமணம் செய்து கடைசி வரை சந்தோசமாக இருப்போம்” என்று மாளவிகா கூறியுள்ளார்.