ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க தனது சொத்தை பயன்படுத்துங்கள் ….விஜயமல்லையா அதிரடி பதிவு !!…

ரூபாய் 9 ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி செய்துவிட்டு லண்டனில் மறைந்துள்ள  விஜய் மல்லையா அவர்கள் தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஜெட் ஏர்வேஸ் விமான நிலைய நிறுவனமானது தற்போது சரிவை சந்தித்து கொண்டுவருகிறது .அந்நிறுவனம் சரிவை சந்தித்து கொண்டுவரும் இந்நிலையில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் அதற்கு உதவி வருகின்றனர் மேலும்  ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க கோரி விஜய் மல்லையா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காக்க தனது பணத்தை பயன்படுத்துமாறு விஜய் மல்லையா வேண்டுகோள்விடுத்துள்ளார் 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள விஜய் மல்லையா லண்டனில் சுற்றி கொண்டு இருக்கிறார் அவரை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் தனது ட்விட்டர் பதிவில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாத்துக்க புதிய முயற்சியாக பொதுத்துறை வங்கிகள் நிதி வழங்குவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

பொதுத்துறை வங்கிகள் கடன்  வழங்க முன்வந்துள்ளது இது போதாது மேலும் உதவ வேண்டும் ஆகையால் கர்நாடக உயர்நீதிமன்றம் முன்னிலையில் தனது அசையும் சொத்துக்களை வைத்துள்ளேன் என்று அதனை பயன்படுத்துடுங்கள் ,ஏன் அந்த பணத்தை வங்கிகள் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள மல்லையா ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காக்க அதை பயன்படுதுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் மேலும் தனது கிங்பிஷர் விமான நிறுவனத்தை மீட்டெடுக்க பொதுத்துறை வங்கிகள் முன்வரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்