விஜய் என் தம்பி…. ரஜினிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை…. சீண்டும் சீமான்…!!

ரஜினிக்கும் எனக்கும் சம்மந்தம் கிடையாது விஜய் என்னுடைய தம்பி என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது , என்னதான் இருந்தாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் , உடை குறித்து கேலி செய்ய ஏதுமில்லை தமிழ்நாட்டின் முதலமைச்சரைஎன்னால் விட்டுத்தர முடியாது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் , ரஜினி இன்னும் எத்தனை நாள் படம் நடிப்பார். அவருக்கு அப்பறம் விஜய் தானா சூப்பர் ஸ்டார். அத வெச்சு எல்லாரும் சொல்லுறாங்க அடித்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று. விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பேன்.ரஜினிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை ஆனால் விஜய் என் தம்பி என்று சீமான் தெரிவித்தார்.