“கேஜிஎஃப்” இயக்குனர் படத்தில் விஜய்…. வெளியான முக்கிய தகவல்…!!

கேஜிஎஃப் பட இயக்குனரின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப் படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் சலார் என்ற படத்தை பிரசாந்த் நீல் தற்போது இயக்கி வருகிறார். இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதாகவும் பாலிவுட் ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் கோலிவுட் வட்டாரங்கள் இதனை மறுத்துள்ளது. ஆகவே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.