விஜய் திமுக பக்கம்… ரசிகர்கள் அதிமுக பக்கம்… எம்.எல்.ஏ பரபரப்பு கருத்து..!!

விஜய் ரசிகர்கள் அதிமுக பக்கமே உள்ளனர் என்று எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இல்லத் திருமண நிச்சயதார்த்த விழா ஒன்றில் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் மற்றொரு தளபதியான மு.க.ஸ்டாலின் அவர்களும் பங்கேற்க இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர்.

Image result for vijay stalin

இது ஒரு அரசியல் ரீதியான சந்திப்பு என்று பலரும் சுட்டிக் காட்டி பேசி வந்தனர். குறிப்பாக நடிகர் விஜய் திமுகவில் இணைய போவதாகவும் பல புரளிகள் எழுந்தன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ரசிகர்கள் பிரபலங்கள் பேசி வரும் நிலையில் அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா இது குறித்து பேசுகையில்,

Image result for ராஜன் செல்லப்பா

நிச்சயதார்த்த விழாவில் நடிகர் விஜய் அவர்கள் ஸ்டாலினை சந்தித்தது ஒரு நட்பு ரீதியான சந்திப்பாக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த சந்திப்பில் அவர் திமுகவில் ஆதரவு அளிக்கிறார் என்று பல்வேறு தரப்பினர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் தவறான கருத்து பெரும்பான்மையான விஜய் ரசிகர்கள் அதிமுக பக்கமே  உள்ளனர் என்று அவர் தெரிவித்து உள்ளார். இவரது கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.