ஓட்டுப்போட சைக்கிளில் வந்த விஜய்…. ரசிகர்கள் அதிர்ச்சி…. வைரலாகும் புகைப்படம்…!!

முன்னணி நடிகர் விஜய் ஓட்டு போடுவதற்காக சைக்கிளில் வந்துள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல திரை பிரபலங்களும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்தவகையில் பிரபல முன்னணி நடிகர்கள் அஜித், சூர்யா, கார்த்தி ஆகியோர் அவர் அவர்களது வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் முன்னணி நடிகர் விஜய்யும் தனது வாக்கை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிள் மூலம் வந்தது பதிவு செய்துள்ளார். அவரின் இந்த வருகை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் சைக்கிளில் ஓட்டு போடுவதற்காக வரும் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்