விஜய் யேசுதாஸ் கட்டசேரி பிறந்தநாள் (மார்ச்-23)….. இத்தனை படங்களில் பாடியிருக்கிறாரா?….!!!!!

தென் இந்திய திரைப் படங்களில் பாடியிருக்கும் ஓர் திரைப்பட பின்னணிப் பாடகர் தான் விஜய் யேசுதாஸ் கட்டசேரி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் துளு மொழிகளில் பாடி உள்ளார். பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ்-பிரபாவிற்கு 2வது மகனாக இவர் சென்னையில் கடந்த 1979, மார்ச் மாதம்-23ம் தேதியன்று பிறந்தார்.

ஜனவரி-21, 2007ல் தன் நீண்டநாள் நண்பரான தர்சனாவை யேசுதாஸ் திருவனந்தபுரத்தில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அம்மெயா என்ற மகள் இருக்கிறார். விஜய் யேசுதாஸ் பாடிய படங்கள் வானவராயன் வல்லவரையன், அவன் இவன், கனிமொழி, பொக்கிஷம், அதே நேரம் அதே இடம், கண்ணாமூச்சி ஏனடா, மலைக்கோட்டை, தாமிரபரணி, பட்டியல், திருப்பதி, புதுப்பேட்டை, அது ஒரு கனா காலம், காதல் கொண்டேன், ஜெயம் ஆகியவை ஆகும். இவர் நடித்த திரைப்படங்கள் படை வீரன், மாரி ஆகும்