விஜய் மில்டன் இயக்கும் படத்தில் ஷாம்…. வெளியான புது அப்டேட் நியூஸ்….!!!!

கடந்த 2001 ஆம் வருடம் வெளியாகிய 12பி திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் ஷாம். இதையடுத்து லேசா லேசா, இயற்கை, ஏபிசிடி, 6 உட்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலடைந்தார் ஷாம். மேலும் அண்மையில் விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த படத்தில் விஜய்க்கு சகோதரராக நடித்து இருந்தார் ஷாம். இந்த நிலையில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கி வரும் புது படத்தில் ஷாம் நடித்து வருகிறார்.

இதில் நாயகியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. கூடிய விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகுமென படக்குழு தெரிவித்து உள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.