கொரோனா அச்சம்… தனித்தனி வீட்டில்… தனிமையில் தவிக்கும் கமல் குடும்பத்தினர்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நடிகர் கமல் ஹாசனின் குடும்பம் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டனர்.

உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க நோய்த்தொற்று இருப்பவர்களும், வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களும் தங்களைதாங்களே  14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

Image result for kamal haasan shruti haasan akshara

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக லண்டன் சென்ற நடிகை ஸ்ருதிஹாசன் தன்னைத்தானே தனிமைபடுத்திக்கொண்டுள்ளார். அதேபோல், அவரது தாயார் சரிகா மும்பையில் உள்ள வீட்டிலும், தந்தை கமல் ஹாசன் மற்றும் தங்கை அக்‌ஷரா ஹாசன் சென்னையில் தனித் தனி வீட்டிலும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இந்தத் தகவலை ஸ்ருதிஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், “அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்?. இது போன்ற நேரத்தில் என்னை பற்றி நானே நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *