விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!!

கோலிவுட் சினிமாவில் பிரபல முன்னணி டைரக்டராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் இப்போது 2 பாகங்களாக உருவாகி வரும் படம் “விடுதலை”. இப்படத்தில் சூரி, விஜய்சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறு கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் விடுதலை படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்யும் அடிப்படையில் படக்குழு முதல் பாகத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.