இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய படத்தின் புதிய அப்டேட்…. விரைவில் ரிலீஸ்…!!

வெற்றிமாறன்- விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ளது “விடுதலைப் படம்”. இப்படம் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி  உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வந்த நிலையில், தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்  வெளியிட உள்ளது. இதனை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இளையராஜா இசையமைத்துள்ளார்.

இதில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் 2 பாகமாக உருவாகியுள்ளது.  சத்தியமங்கலம், சிறுமலை, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. தற்போது அண்மையில் தான் இந்த படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இதற்கான டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. இவ்வாறு விஜய் சேதுபதி தனது ட்விட்டர்  பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் முதல் பாகமானது விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.