”கர்நாடகாவில் கூரை மேல் முதலை” வைரலாகும் வீடியோ …!!

கர்நாடகாவில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை வீட்டில் மேற்கூரை இருப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகின்றது.

கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை  தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றிவிட்டது. உத்தர கர்நாடகா, சிவமோகா ,  மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை.

Image result for Video of the top crocodile in Karnataka

இதனிடையே வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட  விலங்குகள் மூட்டுகள் வீடுகளுக்குள் புகுந்து உள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். பெல்க்காம் மாவட்டத்தில் சிகாலி  என்ற இடத்தில் வீட்டின் மேற்கூரையில் முதலை ஒன்று தஞ்சம் அடைந்து உள்ளது. கர்நாடகாவில் மழை வெள்ளத்திற்கு இதுவரை 40 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.