விரட்டைய சாராய கும்பல் ”சுட்டபடி ஓடிய போலீஸ்” வைரலாகும் வீடியோ ….!!

டெல்லியில் வானில் துப்பாக்கியால் சுட்டபடி கள்ள சாராய கும்பலிடம் இருந்து போலீஸ் தப்பிய வீடியோ வைரலாகி வருகின்றது.

புதுடெல்லியின் காலிண்டி கஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஜே.ஜே. காலனியில் கள்ள சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து ராமகிருஷ்ணன் என்ற போலீஸ் அதிகாரி பகுதிக்கு நேரடியாக ரோந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்குள்ள வீடு ஒன்றின் முன்னால் நின்று கொண்டு விசாரணை மேற்கொண்டார்.அப்போது அங்குள்ள 2 பேர் போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Image result for A Delhi police constable was allegedly beaten up by the residents of JJ colony in New Delhi Kalindi Kunj area in the early hours of August 3, said the Delhi Police. The constable was patrolling the area for bootleggers when the incident took place. 1 arrested

வாக்குவாதம் முற்றி அங்குள்ளவர்கள் போலீஸ் தாக்க முற்பட்டனர். இதை சுதாரித்துக் கொண்ட போலீஸ் அதிகாரி அந்த கும்பலிடமிருந்து தப்பிக்க முற்பட்டார்.உடனே அந்த கும்பல் போலீசை விரட்டி சென்றது.உடனே தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி சுட்டபடியே  அதிகாரி தப்பி சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *