“ஆண் நண்பருடன் வீடியோ கால் பேசிய பெண்” கணவர் தட்டி கேட்டதால் எடுத்த விபரீத முடிவு…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!!

ஆண் நண்பருடன் வீடியோ கால் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பெரிய நத்தம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி கலைவாணி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தனது நண்பருக்கு போன் செய்வதற்காக மனைவியின் செல்போனை எடுத்த போது அதில் நிறைய குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தது. அதோடு நிறைய வாட்ஸ்-அப் வீடியோ கால்கள் வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் தன்னுடைய மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சுரேஷ் கலைவாணியின் தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கலைவாணி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலைவாணியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *