வீட்டிற்கு சென்றபோது… விவசாயிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினர் காத்திருந்த அதிர்ச்சி..!!

மோட்டார் சைக்கிளின் மீது மினி லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அயிரவன் பட்டி பகுதியில் சண்முகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு விவசாயியான முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3மகன்களும், 1 மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முருகேசன் தனது வயலில் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மினி லாரி ஒன்று இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான சரவணனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *