விபத்தில் சிக்கிய பிரபல இயக்குநருக்கு கையில் காயம்…. வெளியான தகவல்….!!!!!

பிரபல இயக்குனர் சுதா கொங்கராவின் சூரரை போற்று திரைப்படம் தமிழில் ஹிட்டானது. இதையடுத்து இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கிய சுதாவிற்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் சுதா கொங்கரா கூறியதாவது “வலிமிகுந்த எரிச்சலான விஷயம். ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பு இல்லை. இது தேவையற்ற பிரேக்” என்று சோஷியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். அதனை தொடர்ந்து விரைவில் குணமடைந்து வர ஜீவி, அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.