இப்போதான் வெளிய வந்தாரு… சுற்றி வளைத்த மர்ம கும்பல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஜாமீனில் வெளியே வந்தவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது வழிப்பறி, கொலை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு கார்த்திகேயனை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். அதன் பின்னர் கார்த்திகேயன் ஜாமினில் கடந்த 4ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் மது அருந்துவதற்காக  போலாட்சி அம்மன் தெருவில் இருக்கும் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து மது அருந்திக் கொண்டிருக்கும் கார்த்திகேயனை மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதில் படுகாயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக கார்த்திகேயனை கொலை செய்துள்ளனரா.? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *