கால்நடை மருத்துவ மனைகளுக்கு மருத்துவர்கள் நியமிக்க வேண்டின் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் வண்டுவாஞ்சேரி, மூலக்கரை உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் 9 கால்நடை மருத்துவமனைகள் அமைந்துள்ளன. தற்போது வெயில் கொளுத்தி வருவதால் கால்நடைகளுக்கு வெப்ப நோய்கள் ஏற்படுகின்றதால் அவைகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய கால்நடை மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் கால்நடைகள் இறந்து விடுகின்றன. இதனால் கால்நடை வளர்ப்போருக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகின்றது.
இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் கூறியதாவது வேதாரண்யம் தாலுகா பகுதியில் 9 கால் நடை மருத்துவமனைகள் உள்ள நிலையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். மேலும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர் இல்லாத காரணத்தினால் அவை இறந்து விடுகின்றன. ஆகவே வேதாரண்யம் தாலுகா பகுதியிலுள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.