“மழை வேண்டி யாகம்” அமைச்சர் செங்கோட்டையன் , வெல்லமண்டி நடராஜன் பங்கேற்பு …!!

ஈரோட்டில் மழை வேண்டி நடந்த யாகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

sengottaiyan , க்கான பட முடிவு

அதிமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் ,  தமிழகத்துக்கு மழை வேண்டி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்த அனைத்து மாவட்ட அதிமுக செயலாளருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில்அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஈரோடுட்டில் உள்ள பச்சைமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகம் நடைபெற்றது. அதே போல திருச்சி ஸ்ரீரங்கம் உறையூரில் நடைபெறும் யாகத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.