“கடும் குளிர்”…. காஷ்மீரில் லியோ படக்குழு பட்ட கஷ்டம்…. முதல் கட்ட சூட்டிங் இனிதே நிறைவு…. வைரலாகும் வீடியோ…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜயுடன் சேர்ந்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்க, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய்தத், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

கடும் குளிருக்கு மத்தியில் காஷ்மீரில் படக்குழுவினர் கஷ்டப்பட்டு படப்பிடிப்பை முடித்துள்ளனர்‌. படப்பிடிப்பின் போது தொழில்நுட்ப கலைஞர்கள் பல்வேறு விதமான சிரமங்களை அனுபவித்துள்ளார்கள். இந்நிலையில் காஷ்மீரில் சூட்டிங் நிறைவடைந்ததையும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்ட கஷ்டங்களையும் தற்போது படக்குழு வீடியோ வெளியிட்ட அறிவித்துள்ளது. சன் டிவியின் youtube பக்கத்தில் வெளியாகியுள்ள லியோ படத்தின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.