எடையைக் குறைத்தது எப்படி… ரகசியம் சொல்லும் சானியா மிர்சா!

நான்கு மாதங்களில் 26 கிலோ எடையைக் குறைத்தது எப்படி என நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

33 வயதான சானியா மிர்சா குழந்தைப்பேறுக்குப் பிறகு கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பங்கேற்ற முதல் டென்னிஸ் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று கம்பேக் தந்துள்ளார்.

ஹோபர் தொடரை வென்ற சானியா இணை

இரண்டு ஆண்டுகளாக டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வில் இருந்த சானியா மிர்சா, உடல் எடை கூடி வலம் வந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்தது. ஆனால் சானியா டென்னிஸ் விளையாட்டிற்கு திரும்ப முடிவு செய்தபின் நான்கே மாதங்களில் தனது உடல் எடையை 26 கிலோ வரைக் குறைத்துள்ளார்.

சானியா மிர்சா

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” நாம் அனைவரும் சில இலக்குகளை நிர்ணயம் செய்துகொள்வோம். அது சிறியதோ, பெரியதோ… பெருமை கொள்ளும் வகையில் இலக்குகள் இருக்கவேண்டும். நான் எனது எடையை 89 கிலோவிலிருந்து 63 கிலோவாக குறைப்பதற்கு நான்கு மாதங்கள் எடுத்தன. குழந்தைபேறுக்குப் பிறகு ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருப்பது நீண்ட பயணம் போல் உள்ளது. எனது ஃபிட்னெஸ்ஸை மீட்டெடுத்து சர்வதேச தொடர்களில் ஆடுவது மகிழ்ச்சியாக உள்ளது. உங்களைச் சுற்றி யார் என்ன சொன்னாலும் உங்கள் கனவை விட்டுவிடாதீர்கள். என்னால் முடியும் என்றால், இங்கு அனைவராலும் முடியும்’’ எனப் பதிவிட்டுள்ளார். சானியா மிர்சாவின் பதிவு அவரது ரசிகர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *