இது கொலையா….? கழுத்தில் இருந்த அடையாளம்…. போலீஸ் விசாரணை….!!

காட்டுப்பகுதியில் வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் சடலமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருக்கும் வேப்ப மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து சடலமாக தொங்கி நபருக்கு 25 வயது, அவர் யார், எந்த ஊரில் வசித்தவர் என்பது குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் இறந்த நபர் வட மாநில வாலிபர் என்றும், அவரது கழுத்தில் 3 கயிறுகளால் இறுக்கி கட்டப்பட்டு உள்ளதாலும் உடலில் ரத்த காயங்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *