ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு…. சாலை அமைக்கும் பணிகள்…. எம்.எல்.ஏ., மேயர் நேரில் ஆய்வு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொணவட்டம், கஸ்பா வசந்தபுரம், பத்மாவதிநகர், தேவிநகர், சின்னஅல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்காக ரூ.1 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சின்ன அல்லாபுரத்தில் நடைபெற்ற பணிகளை நேற்று எம்.எல்.ஏ. கார்த்திகேயன் மற்றும் மேயர் சுஜாதா ஆகிய இருவரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதன் பின் அதிகாரிகளிடம், பணிகள் தரமானதாக அமைக்கப்படுகிறதா? என்பது பற்றி கேட்டறிந்தனர். இதனையடுத்து சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் என்று ஆய்வு மேற்கொண்ட பின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.