37 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்…. தமிழக அரசின் சூப்பர் திட்டங்கள்…. குவியும் பாராட்டுகள்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் 37 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.16 லட்சம் மதிப்பிலான நிதியுதவியை வழங்கினார். அப்போது கலெக்டர் பேசியுள்ளதாவது, பொது மக்களுடைய நலன் காப்பதற்காக முதல்-அமைச்சர் நாள்தோறும் ஒவ்வொரு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.

இதற்கு அ.செ.வில்வநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்க, பள்ளி கல்வித்துறையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், அதுமட்டுமின்றி சாலை விபத்துக்கள் ஏற்படும்பொழுது பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும் நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவது மற்றும் 48 மணி நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக இன்னுயிர் காப்போம், நம்மைக்காக்கும் 48 மணி நேரம் போன்ற திட்டங்களும் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஒவ்வொரு திட்டங்களும் பொதுமக்களுக்கு பலன் அளிப்பதாகவும், சாமானிய மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாகவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே அரசின்  பல்வேறு நலத்திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என அவர் பேசினார். இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, ஒன்றியக்குழுத் தலைவர்கள் விஜயா, திருமதி, நகரமன்ற துணை தலைவர் சபியுல்லா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சமூக நலத்துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.