வேலூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டி காவல்துறையில் பணியாற்றும் போலீசார்கள், ஆயுதப்படை போலீஸ், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, மனோகரன் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது, போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்றனர்.
இதில் ஓட்டம், வாலிபால், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட 11 வகையான போட்டிகள் நடைபெற்றது. மேலும் இது தவிர சிறுவர், சிறுமிகளுக்கும், குடும்பத்தினருக்கும் என தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான முன் ஏற்பாடுகளை ஆயுதபடை இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்த நிலையில் ஆர்வமுடன் அனைவரும் பங்கேற்றனர்.