காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட நிலையில், இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இந்தியா முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா கலையரங்கம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் தாங்க, சிறுபான்னைபிரிவு மாவட்ட தலைவர் வாகித்பாஷா, மண்டல தலைவர் ரகு, பொதுக்குழு உறுப்பினர்கள் கப்பல்மணி, சித்தரஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த உண்ணாவிரத போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற நிலையில், இதில் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறித்ததை கண்டித்து மற்றும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நிர்வாகிகள் பலர் உரையாற்றினார்கள்.